Reading Time: < 1 minute

கனடாவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஷாம்பூ வகைகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது.

இவ்வாறு ஆபத்து நிறைந்த ஷாம்பூ உள்ளிட்ட தலை மயிர் பராமரிப்பு பொருட்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுகாதாரத் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஷாம்பூ, கண்டிஷனர், ஹேர் ஆயில் போன்றவற்றில் இந்த நச்சுப் பொருள் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நச்சுப் பொருளின் ஊடாக புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டவ் மற்றும் ட்ரெஸ்மி (Dove மற்றும் Tresemmé)ஷாம்பூ வகைகளில் இந்த நச்சுப் பொருள்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக இந்த பொருட்களை விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கின்ற இந்த வகை உற்பத்திகளை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 1.5 மில்லியன் அலகுகள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் இவ்வாறு நச்சு பொருள் அடங்கிய ஷாம்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சுவாசத்தின் மூலமாக வாய் வழியாக அல்லது தோலின் உள்ளாக உறிஞ்சப்பட்டு இந்த ரசாயனம் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக லுகேமியா மற்றும் ரத்த புற்றுநோய் போன்றவற்றை இந்த ரசாயனம் ஏற்படுத்த கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

டாவ் உள்ளிட்ட ஷாம்பூக்களில் benzene என்ற இரசாயனம் அடங்கியிருப்பதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.