Reading Time: < 1 minute

கனடாவில் மக்கள் பல வாரங்களுக்கு வீடுகளில் தனித்திருப்பதைத் தவிர்க்க இயலாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக தனிமனித இடைவெளிகள் அவ்வளவு சுலபமாக நீக்கப்பட வாய்ப்பில்லை என அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் இதுவரை 509 பேர் உயிரிழந்த நிலையில், இம்மாத நடுப்பகுதியில் இந்த எண்ணிக்கை 700ஆக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று மட்டும் அங்கு 82 உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன் தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மரணப்பதிவுகளும் அதிகரித்து வருகின்றது.

கனடாவில் நேற்று மட்டும் ஆயிரத்து 327 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 20 ஆயிரத்து 765 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அவர்களில் கணிசமானோர் (5311) குணமடைந்துள்ள நிலையில் 518 பேர் வைரஸ் காரணமாக கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.