Reading Time: < 1 minute

கனடாவின் சில நகரங்களில் வீடு கொள்வனவு செய்வது என்பது மிக சவால் மிக்க ஒன்றாக காணப்படும் நிலையில் சில நகரங்களில் மலிவான விலைக்கு வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் சராசரி வருமானம் ஈட்டும் ஒருவரால் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது சிரமமானதாகவே காணப்படுகின்றது.

எனினும் சில நகரங்களில் குறைந்த விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Zoocasa என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நியூ பிரவுன்ஸ்விக் மாகாணத்தில் காணப்படும் செயின்ட் ஜான் நகரில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது மலிவானது என தெரிவிக்கப்படுகிறது.

செயின்ட் ஜானில் வீடு ஒன்றின் சராசரி விலை 291000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

ரெஜினாவில் வீடுகளின் விலை குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக், சஸ்கட்ச்வான், எட்மோன்டன், கியூபேக் போன்ற நகரங்களிலும் மலிவான விலையில் வீடுகளை கொள்வனவு செய்ய முடியும் என அந்த ஆய்வு தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை வாங்கூவார், டொரன்டோ போன்ற நகரங்களில் வீடு ஒன்றை கொள்வனவு செய்வது மிகவும் சவால் மிக்கதாக காணப்படுகின்றது.

இந்த பகுதிகளில் வீடு ஒன்றின் சராசரி விலை ஒரு மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.