Reading Time: < 1 minute

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண்ணொருவர் கத்தியால் பலமுறை குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள சர்ரேயில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 7ஆம் திகதி, பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்டுக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்றமுடியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் ஹர்ப்ரீத் கௌர் கில் (Harpreet Kaur Gill, 40) என தெரியவந்தது. அவரது பெற்றோர் இந்தியாவில் வாழ்ந்துவருகிறார்கள்.

டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, ஹர்ப்ரீத்தின் கணவரான நவிந்தர் கில் (Navinder Gill, 40) கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 22ஆம் திகதி, தான் தன் மனைவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் நவிந்தர்.

ஆசிரியையாக பணியாற்றிவந்த ஹர்ப்ரீத்துக்கு, 10 வயதுக்கு குறைவான வயதுள்ள மூன்று பிள்ளைகள் இருந்த நிலையில், அவர்தான் பிள்ளைகளை வளர்த்துவந்தார்.

நவிந்தருக்கு, இம்மாதம் 21ஆம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் 10 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வரமுடியாது என்றும் பிரிட்டிஷ் கொலம்பியா அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.