Reading Time: < 1 minute

நோவா ஸ்கோடியாவில் இந்திய மாணவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைதாகியுள்ளதாகவும் மூன்றாவது நபரை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, ட்ரூரோ பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் விசாரணையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

செப்டம்பர் 5ம் திகதி இந்திய மாணவரான Prabhjot Singh Katri (23) பணி முடித்து தமது அறைக்கு திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 21 வயதான Dylan MacDonald என்பவரையும் 22 வயதான பூர்வக்குடி இளைஞர் Marcus Denny என்பவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வழக்கில் தொடர்புடைய மூன்றாமர் இன்னும் சிக்கவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பில் 20 வயது நபர் கைதாகியுள்ளதும், அவர் மீது இதுவரை வழக்குகள் ஏதும் பதியவில்லை எனவும் பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை இந்த வழக்கு சரியான பாதையில் செல்வதாகவே தாங்கள் நம்புவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது