Reading Time: < 1 minute

கனடாவில் இணைய வழியிலான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 12 மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருட்களை கொள்வனவு செய்வார்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணைய வழியூடாக விளம்பரம் செய்து விற்பனை செய்யும் போது அதிக அளவிலான கொள்ளைச் சம்பவங்களும் மோசடிகளும் இடம் பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பில் கூடுதல் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் கத்தி முனையில் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரையில் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.