Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கனடாவின் இட்டோபீகொக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விலோவிரிட்ஜ் மற்றும் எக்லின்டன் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றில் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீ விபத்தில் சிக்கிய ஒருவரை தீயணைப்புப் படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எனினும் இந்த தீ விபத்துச் சம்பவத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.