Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவமொன்று குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சில நபர்கள் தீயனைப்புப் படையினர் என்ற போர்வயில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

போலியான பாதுகாப்பு கருவிகள் (safety kits) விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

கனடாவின் ஹால்டன் பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹால்டனின் பர்லிங்டன் தீயனைப்புப் பிரிவினர் பாதுகாப்பு கருவிகளை விற்பனை செய்யவில்லை எனவும் மோசடி கும்பல் ஒன்று போலியாக விற்பனை செய்து வருவதாகவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஹால்டன் பொலிஸார் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலமும் மக்களை தெளிவூட்டியுள்ளனர்.

மோசடியில் சிக்கியவர்கள் எவ்வாறு அதனை எதிர்நோக்க வேண்டும் என்பது குறித்தும் பொலிஸார் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.