Reading Time: < 1 minute

கனடாவில் இணையவழியாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத ஊசி மருந்துகளில் ஆபத்தான பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Tamil Business Directory

சீனாவைச் சேர்ந்த Shanghai ERP Peptide Biotechnology நிறுவனத்துடன் தொடர்புடைய 11,400-க்கும் மேற்பட்ட மருந்துக் குப்பிகள் கனடாவில் கைப்பற்றப்பட்டுள்ளன. பரிசோதிக்கப்பட்ட மருந்துகளில் கடுமையான தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

உடல் எடை குறைப்பு, தசை வளர்ச்சி மற்றும் இளமைத் தோற்றத்தைப் பேணுதல் போன்ற நோக்கங்களுக்காக இந்த அங்கீகரிக்கப்படாத பெப்டைட் மருந்துகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய மருந்துகளை ஊசி மூலம் செலுத்துவதால் கடுமையான தொற்றுகள் ஏற்படுவதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் காய்ச்சல், வீக்கம் அல்லது ஊசி செலுத்திய இடத்தில் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மருத்துவரின் பரிந்துரையுடன் அங்கீகரிக்கப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்குமாறு Health Canada வலியுறுத்தியுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.