கனடாவின் டொரன்டோ நகர பிரஜைகளுக்காக இலவச தடுப்பூசி வழங்கும் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பருவ காலத்தில் கனடாவில் பரவலாக காணப்படக்கூடிய சளி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டொரண்டோ பொதுச் சுகாதார திணைக்களத்தினால் இந்த தடுப்பூசி ஏற்றும் திட்டம் நடைமுறையை படுத்தப்பட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட வயதினை உடைய அனைவரும் இந்த தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றிக்கொள்ள விரும்புவார்கள், தங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக்கான முன்பதிவு செய்வதற்காக அடையாள அட்டை அல்லது சுகாதார அட்டை அவசியமற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட சளி காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் அதே இடத்தில் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.