Reading Time: < 1 minute

முழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன.

6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப் பயணத்தை ஆரம்பித்தது.