Reading Time: < 1 minute

கனடாவில் அரிய வகை உண்ணிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் உயிராபத்தைக் கூட ஏற்படத்தக் கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

எட்டு கால்களைக் கொண்ட இரத்தம் உறிஞ்சும் தன்மைக் கொண்ட இந்த அரிய வகை உண்ணிகள் அமெரிக்காவில் அதிகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வயது முதிர்ந்தவர்களை இந்த நோய் மிகவும் ஆபத்தாக தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த உண்ணிக்காய்ச்சல் மலேரியா நோய்க்கு நிகரான ஓர் வகையான நோயாக கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அதிகளவில் பரவி வரும் இந்த உண்ணிக்காய்ச்சல் கனடாவிலும் பரவக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

காலநிலை மாற்றம் காரணமாக கனடாவிலும் இந்த வகை உண்ணிகள் உயிர் வாழக்கூடிய சாதக நிலைமைகள் உருவாகியுள்ளது.