Reading Time: < 1 minute

கனடாவில் நான்கு பேரை கொண்ட குடும்பம் ஒன்று அடுத்த ஆண்டில் உணவிற்காக கூடுதல் செலவை மேற்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் நாளுக்கு நாள் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது அடுத்த ஆண்டில் நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று 800 டாலர்கள் மேலதிகமாக உணவிற்காக செலவழிக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், டெல் ஹோஸ் பல்கலைக்கழகம், குயில்ப் பல்கலைக்கழகம் மற்றும் சஸ்கெட்ஸ்வான் பல்கலைக்கழகம் என்பன கூட்டாக இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளன.

இதன்படி நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் 16,833 டாலர்களை செலவிட நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஆண்டில் சராசரியாக 3 முதல் 5 வீதம் வரையில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும் இறைச்சி, மரக்கறி மற்றும் உணவு விடுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் என்பனவற்றின் விலைகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.