கனடாவின் சார்லட்டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 15 குடியிருப்பாளர்கள் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
கம்பர்லேண்ட் தெருவில் அமைந்துள்ள 10 அலகுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இரவு சுமார் 9:33 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக சார்லட்டவுன் தீயணைப்புத் துறை சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்ததும் சார்லட்டவுன் காவல் துறை, ஐலேண்ட் அவசர மருத்துவ சேவை மற்றும் ஹ்யூமேன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்டிடத்தின் ஒரு அலகு தீயில் பலத்த சேதமடைந்துள்ளதுடன், கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 15 குடியிருப்பாளர்களுக்கும் கனடிய ரெட் க்ராஸ் அமைப்பின் உதவியுடன் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு பூனைகள் சிகிச்சைக்காக அட்லாண்டிக் வெட்டினரி கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மூன்றாவது பூனை ஒன்று மாயமாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.