கனடாவின் வடக்கு பகுதியில் திருட்டு சம்பவங்களில் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களினால் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹாலிபாக்சில் அமைந்துள்ள பிஸ்கட் ஜெனரல் ஸ்டோர் என்ற சில்லறை வர்த்தக நிலையத்தில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்களின் காரணமாக தமது வருமானம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜன்னல்களை உடைத்து பொருட்கள் களவாடப்பட்டு இருப்பதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.
கோவில் பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் கனடா முழுவதிலும் இவ்வாறான கொள்ளை மட்டும் திருட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களினால் சுமார் ஐந்து முதல் ஆறு பில்லியன் வரையிலான வருமானம் இழக்கப்படுவதாக வியாபார மற்றும் சந்தைப்படுத்தல் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.
உணவு பொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஆடை விற்பனை நிலையங்கள் என பல்வேறு இடங்களிலும் கொள்ளைச் சம்பவங்கள் களவு என்பன அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பணவீக்கம் காரணமாக இவ்வாறு திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.