Reading Time: < 1 minute

உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே கனடாவின் நிதிக் கட்டமைப்பும் சவால்களை எதிர்நோக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய மத்திய வங்கி ஆளுனர் டிப் மெக்கலம் இந்த சாத்தியம் பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகின் முதனிலை வங்கிகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சூயிஸ் உள்ளிட்ட உலகின் வங்கிகள் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தன.

ஐரோப்பா மட்டுமன்றி அமெரிக்காவிலும் நிதி நிறுவனங்களில் சவால் மிக்க நிலைமைகளை அவதானிக்க முடிந்தது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஏனைய நாடுகளைப் போன்றே கனடாவிலும் வட்டி வீதங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வட்டி வீத உயர்த்துகை பல்வேறு நிதி ரீதியான சவால்களை உருவாக்கும் எனவும், அவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.