கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் கட்சியான லிபரல் கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
லிபரல் கட்சியின் றொரன்டோ நாடாளுமன்ற உறுப்பினர் ஹான் டொங் இவ்வாறு கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் தாம் நாடாளுமன்றில் சுயாதீன உறுப்பினராக கடமையாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்.
கனடாவில் இறுதியாக நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களின் போதும் சீனா தலையீடு செய்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சீனத் தலையீடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹான் டொங்கிற்கு தொடர்பு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான ஓர் பின்னணியில், டொங் திடீரென கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
எவ்வாறெனினும், தாம் சீனத் தலையீடுகள் குறித்த குற்றச்சாட்டுக்களை நிரகாரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.