Reading Time: < 1 minute
கனடாவின் புதிய அரச தலைவராக மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு குறித்த ஆவணத்தில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் ஆளுனர் நாயகம் மேரி சிமோன் ஆகியோர் கையொப்பிட்டனர்.
கனடாவின் அரச தலைவராக மன்னர் சார்ள்ஸை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு Rideau Hallல் நடைபெற்றது.
அரச தலைவராக மன்னர் சார்ள்ஸை அறிவிக்கும் வகையில் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.
1957ம் ஆண்டு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் முதல் தடவையாக கனடாவிற்கு அதிகாரபூர்வ விஜயம் செய்த போது பயன்படுத்திய மேசையே, மன்னார் சார்ள்ஸை அரச தலைவராக அறிவிக்கும் ஆவணத்தில் கையொப்பமிடவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மகாராணியின் மறைவிற்காக பல்வேறு அஞ்சலி நிகழ்வுகள் கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.