Reading Time: < 1 minute
கனடாவில் பறவை காய்ச்சல் தொடர்பிலான தகவல்கள் பதிவாகியுள்ளன.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பிரம்டன் பகுதியில் பறவை காய்ச்சல் பதிவாகியுள்ளது.
பறவைக் காயச்சலினால் பீடிக்கப்பட்ட நீர்ப்பறவையொன்று உயிரிழந்துள்ளது.
Professor’s Lake and Duncan Valley Foster South ஆகிய பகுதிகளில் இவ்வாறு பறவை காய்ச்சலுடனான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பறவை காய்ச்சல் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவும் சாத்தியம் மிக குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பறவை காய்ச்சல் காரணமாக பொதுமக்களுக்கு தற்போதைக்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக டொரன்டோ மிருகக்காட்சி சாலையின் பறவைகள் காட்சி பிரிவு அண்மையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.