கனடாவின் விவசாய மற்றும் உணவு உற்பத்தி துறைக்கு சைபர் தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துறைகள் மீது போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இலகுவில் இலக்கு வைக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விவசாய செய்கை, முதல் உணவு உற்பத்தி, விநியோகம், மளிகை பொருள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு படிமுறைகளில் இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சோபேஸ் நிறுவன வாடிக்கையாளர்கள் சைபர் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு உணவு அல்லது விவசாய துறை சார் சைபர் தாக்குதல்களினால் அதிகமாக வாடிக்கையாளர்களே பாதிக்கப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.