Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்றாரியோ மாகாண மாணவ மாணவியர் கணித பாடத்தினை கற்பதற்கு இடர்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தரம் ஆறு மாணவர்கள் கணித பாடத்தில் புள்ளிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணத்தில் தரம் ஆறில் கற்கும் மாணவ மாணவியர் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் கணித பாட பரீட்சையில் குறைந்த புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த 2021 22 ஆண்டுகளுக்கான மாணவர் மதிப்பாய்வு தரவுகள் அடிப்படையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் முதல் தடவையாக மாணவர் மதிப்பாய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கணித பாடத்தை விரும்பி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் கருத்துக் கணிப்பு ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற மாணவ மாணவியரில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கணித பாடத்தில் இடர்படுவதாகவும், விரும்பிக் கற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.