Reading Time: < 1 minute
இலங்கையின் குறைந்த கட்டண விமான சேவையான FitsAir எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கட்டுநாயக்க மற்றும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த விமான சேவையானது வாரம் இருமுறை இடம்பெறவுள்ளது.
FitsAir தற்போது கட்டுநாயக்கவிலிருந்து டுபாய், மாலே மற்றும் சென்னைக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.