Reading Time: < 1 minute

ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இரண்டு ஆண்டுகளின் பின்னர் கனடிய வீரர்கள் வெள்ளிப் பதக்கத்தை சூடிக்கொண்டுள்ளனர்.

கனடாவின் குறுந்தூர ஓட்ட வீரர்கள் நேற்றைய தினம் ஒலிம்பிக் போட்டி தொடரில் வெள்ளி பதக்கத்தை சூடிக்கொண்டனர்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது கனடிய வீரர்கள் வெண்கல பதக்கத்தை வென்றிருந்தனர்.

எனினும் இந்த போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட பிரித்தானிய வீரர்கள் ஊக்க மருந்து பாவனையை தொடர்பான குற்றச்சாட்டுக்கு இலக்காகி இருந்தனர்.

இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டதனை தொடர்ந்து குறித்த வெள்ளி பதக்கம் கனடிய அணிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் கனடிய வீரர்களுக்கு நேற்றைய தினம் வெள்ளி பதக்கம் சூட்டப்பட்டது.

100 மீற்றர் தர 4 அஞ்சல் ஒட்ட போட்டியில் பங்கேற்ற அன்ட்ரே டி கிரேஸ், ஆரோன் பிரவுன், பிராண்டன் ரொட்னி மற்றும் ஜெரம் பிலேக் ஆகிய நால்வருக்கும் நேற்றைய தினம் இந்த வெள்ளி பதக்கம் சூட்டப்பட்டது.

பிரித்தானிய வீரர்கள் தகுதி இழப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கனடிய வீரர்கள் 100 தர 4 அஞ்சல் விட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதாக அதாவது ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் அந்தப் பதக்கங்கள் சூட்டப்படும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.