கனடா மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இரத்த அழுத்தத்தை தெரிந்துகொள்வதற்காகவே புதிய செல்ஃபி கமரா ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
ட்ரான்ஸ்டெர்மல் ஒப்டிகல் இமேஜிங் பல்கலைக் கழக உளவியலாளர் காங் லீ மற்றும் ஆய்வாளர் போல் ஜெங் ஆகிய இருவரும் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த புதிய தொழில்நுட்பமானது, நமது முகத்தோலில் இருந்து கசியும் ஒளியை ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளில் இருக்கும் ஒப்டிகல் சென்சார்கள் உள்வாங்கி, அதன் மூலம் நம் தோலின் கீழ் பகுதியில் இருக்கும் ஹீமோகுளோபினில் இருக்கும் சிவப்பு நிற ரத்த ஒளியை படம் பிடிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 விநாடி செல்ஃபி காணொளியை எடுப்பதன் மூலம், இதயத் துடிப்பு, மன அழுத்தம் மற்றும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் 3 வகையான மாற்றங்களை 95 சதவீத துல்லியத்துடன் அளவிட முடியும்.
இதுதவிர ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு, ஹீமோகுளோபின் மற்றும் கொழுப்பின் அளவு உள்ளிட்டவற்றையும் அறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த செயலியை சீனாவில் உள்ள நியூராலஜிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
விரைவில் இந்த செயலி டிஜீட்டல் மென்பொருள் சந்தைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.