ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் நான்கு கட்சிகளில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
பசுமைக் கட்சியின் தலைவர் மைக் சிரினியருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
பணியாளர் ஒருவரிடமிருந்து சிரினியருக்கு கோவிட் தொற்று பரவிவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சுய தனிமையில் இருப்பதாகவும், இலேசான இறுமல் ஏற்பட்டுள்ளதாகவும் வேறும் பாதிப்புக்கள் எதுவும் கிடையாது எனவும் சிரினியர் தெரிவித்துள்ளார்.
என்.டி.பி. கட்சியின் தலைவர் அன்ட்ரே ஹொர்வாத் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனால் வடக்கு ஒன்றாரியோ பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படவிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிரச்சாரக் கூட்டங்களில் பங்குபற்ற கிடைக்காமை குறித்து வருந்துவதாக ஹொர்வாத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மாகாணத்தின் பிரதான அரசியல் கட்சிகளின் நான்கு தலைவர்களும் தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருகாமையில் இருந்து விவாதம் செய்த போதிலும் கடசித் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் நேரடித் தொடர்பு பேணவில்லை எனவும் ஏனைய தலைவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.