Reading Time: < 1 minute

ஒன்றாரியோ மாகாணத்தில் சர்வதேச மாணவர்களது விண்ணப்ப எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் 23 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2024ம் ஆண்டில் 235000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாகவும் இந்த ஆண்டில் 181500 விண்ணப்பங்களே கிடைக்கப் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர் வீசா எண்ணிக்கை இந்த ஆண்டிலும் அடுத்த ஆண்டிலும் மேலும் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அரசாங்கம் சர்வதேச மாணவர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.