Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் உள்ள 300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இந்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கவுள்ளன

தெற்கு ஒன்றாரியோ முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களின் முழு பட்டியலையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டது.

அந்த மருந்தகங்கள் 60 முதல் 64 வயதிற்குட்பட்ட ஒன்றாரியர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அளவை வழங்கும்.

குறிப்பிட்ட வயதுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால், கனடாவின் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு அந்த வயதினருக்கான செயற்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்கள் காரணமாக, 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பயன்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை.