அபாயகரமான பொருள் கொண்ட பொதிகள் மாகாணம் முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து பொது பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது ஒன்ராறியோ மாகாண காவல்துறை.
தொடர்புடைய பொதிகளில் சோடியம் நைட்ரைட் இருப்பதாகவும், தற்கொலை எண்ணம் போன்ற ஆபத்தில் உள்ளவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பொலிசார் கூறுகின்றனர்.
மேலும், அந்த பொதிகளை எதிர்பாராத வகையில் பெற்றவர்கள் அல்லது அப்படியான ஒருவரை தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறையைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள்.
மாகாணம் முழுவதும் உள்ள பத்துக்கும் மேற்பட்ட சமூகங்களுக்கு இந்த பொதிகள் அனுப்பப்பட்டிருக்கலாம் என முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பீல் பிராந்தியத்தில் இருவர் அவ்வாறான பொதிகளை இணையமூடாக பெற்று தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.