Reading Time: < 1 minute

ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.

ஒன்ராறியோ மாகாண தணிக்கையாளர் ஜெனரல் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000 நோயாளிகள் காயமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை மற்றும் வெளியேற்றப்பட்ட 100 நோயாளிகளில் ஆறு பேருக்கு கவனிப்பின் போது தீங்கு விளைவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், ஒன்ராறியோ மருத்துவமனைகள் ஒரு மில்லியன் மக்களை வெளியேற்றும். அவர்களின் சுமார் 67,000 பேர் மருத்துவமனையில் தங்கியிருந்தபோது பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையை குறைக்க உடனடியாக அரசாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜெனரல் போனி லிசிக் அழைப்பு விடுத்துள்ளார்.