ஒன்ராறியோவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஊதியம் 50 சென்ட் அதிகரிப்பு செய்யப்படுவதுடன் குறைந்தபட்ச ஊதியம் 15.50 டொலராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 18 வயதிற்குட்பட்ட மாணவர்களும் 50 சென்ட் அதிகரிப்பு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 14.60 டொலர் ஊதியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த இந்த தொகை போதுமானதாக இல்லை என்று பல கருத்துகள் இருந்தபோதிலும், கனடாவின் பிற மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் ஒன்டாரியோவை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது.
இந்த உயர்வு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தவுடன், கனடாவில் நான்காவது மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கும் மாகாணங்களில் ஒன்டாரியோவும் இடம்பெறும்.
அதேசமயம் நுனாவுட் குறைந்தபட்ச ஊதியம் 16.00 டொலருடன் முதலாவது இடத்திலும், யூகோன் 15.70 டொலர் ஊதியத்துடன், இரண்டாவது இடத்திலும் பிரிட்டிஷ் கொலம்பியா 15.65 டொலருடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.