ஒன்ராறியோவில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சோதனை நடத்தப்பட்டு வருவதாக ஒன்ராறியோ இணை தலைமை மருத்துவ அதிகாரி பார்பரா யாஃப் தெரிவித்துள்ளார்.
குயின்ஸ் பூங்காவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனா வைரஸ் தொடர்பாக விளக்கம் அளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறுகையில், ‘ஒன்ராறியோ மாகாணத்தில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்களுக்கான சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் முப்பத்தெட்டு எதிர்மறையான முடிவுகளே வந்துள்ளன. முடிவுகளுக்காகக் காத்திருக்கும் 27 பேரில் பெரும்பாலோர் வீட்டிலேயே இருக்கிறார்கள். மாகாணத்தில் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புக்கு வருவதற்கான ஆபத்து குறைவாகவே உள்ளது. ரொறன்ரோ அல்லது ஒன்ராறியோவில் இந்த தொற்று பரவியதற்கான எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை’ என கூறினார்.
கனடாவில் தற்போது மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் ரொறன்ரோவிலும், மூன்றாவது நபர் பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் இனங் காணப்பட்டுள்ளனர்.