Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாகாணம் தழுவிய ரீதியில் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை அமுல் படுத்த மாகாண அரசு தீா்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக புதிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என அரசு தரப்பினரை மேற்கோள்காட்டி கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய கட்டுப்பாடுகளின் கீழ் சில்லறை விற்பனை நிலையங்கள் 25 வீத திறன் வரம்புகளுடன் திறக்க அனுமதிக்கப்படும். அத்துடன், உட்புற பரிமாற்ற உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஒரு மாதத்துக்கு மூடப்படும்.

மேலும், வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் ஒன்றுகூட தடை விதிக்கப்படும். வெளிப்புறங்களில் 5 பேருக்கு மேல் ஒன்றுகூட தடை அமுலாகும். 5 பேருக்குட்பட்ட ஒன்றுகூடல்களில் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.