ஒன்ராறியோ மாகாணத்தில் நேற்று 73 கொரோனா மரணங்கள் பதிவானதுடன், 2,063 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர்.
மாகாணத்தில் புதன்கிழமை 49, வியாழக்கிழமை 56, வெள்ளிக்கிழமை 58 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் நேற்று சனிக்கிழமை 73 கொரோனா மரணங்கள் பதிவாகின
நேற்று உயிரிழந்தவர்களில் 24 பேர் முதியோர் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்கள் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்ராறியோவில் கடந்த மார்ச் மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 6,145 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் 3,574 பேர் முதியோர் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களாவார்.
எனினும் தொற்று நோயாளர் தொகை கடந்த வாரத்தில் சாராசரி 2,603 ஆக இருந்த நிலையில் இந்த வார சாராசரி 1,968-ஆகக் குறைந்துள்ளது.
மாகாணத்தில் தொடர்ச்சியாக அதிகளவு தொற்று நோயாளர்கள் கிரேட்டர் டொராண்டோ பகுதிகளில் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
நேற்று பதிவான தொற்று நோயாளர்களில் 713 பேர் ரொரண்டோவைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன், பீல் பிராந்தியத்தில் 379, யோர்க் பிராந்தியத்தில் 178, ஹால்டன் பிராந்தியத்தில் 55, டர்ஹாம் பிராந்தியத்தில் 89 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்தார்.