Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கிரிக்லான்ட் லேக் பகுதியில் காலியாக இருந்த கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒன்ராறியோ மாகாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tamil Business Directory

கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி இரவு சுமார் 10 மணியளவில் அரசாங்க வீதிப் பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத கட்டிடம் ஒன்றில் மனித எச்சங்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு கிரிக்லான்ட் லேக் தீயணைப்புப் பிரிவினரும் அவசர மருத்துவ சேவைப் பிரிவினரும் சென்றிருந்தனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், இது தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் எனவும், பொதுமக்களுக்கு பரந்த அளவிலான அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதால் அந்தப் பகுதியில் பொலிஸாரின் பிரசன்னம் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அந்தக் கட்டிடத்தில் எவ்வளவு காலமாக இருந்திருக்கலாம் என்பது குறித்தோ அல்லது இந்த சம்பவத்தில் குற்றச் செயல் இடம்பெற்றிருக்கிறதா என்பது குறித்தோ பொலிஸார் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 1-888-310-1122 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.