Reading Time: < 1 minute
தெற்கு மற்றும் கிழக்கு ஒட்டாவாவில், மக்கள் எதிர்வரும் தினங்களில் கடுமையான பனிப் பொழிவினை எதிர்கொள்வார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையிலேயே, இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, கேப்பிடல் மற்றும் ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சி, ப்ரோக்வில் மற்றும் கார்ன்வால் போன்ற இடங்களை உள்ளடக்கிய பகுதியில், 12 சென்டிமீட்டர் வரை பனி பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை கிங்ஸ்டனுக்கும் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்றும், அங்கு ஐந்து முதல் ஏழு சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, ஐந்து முதல் 10 சென்டிமீட்டர் வரம்பில் பெம்பிரோக்கில் பனிப்பொழிவை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.