Reading Time: < 1 minute

ஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட உணவு மற்றும் சுகாதாரப் பொருட்கள் பற்றாக்குறையை எதிர்த்து, 14 கைதிகள் புதன்கிழமை காலை ஒட்டாவா-கார்லேடன் தடுப்பு மையத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

கைதிகள் முன்வைத்திருந்த கோரிக்கைகள், நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததாக சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது 14 கைதிகளும் அதிகபட்ச பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.