Reading Time: < 1 minute

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவை ஏற்படுத்துவதை கனடா மக்கள் வரவேற்ற போதிலும், இந்த விவகாரம் கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அரசியல் ரீதியில் ஒரு சிக்கலான சவாலாக மாறக்கூடும் என்று பிரபல கருத்துக்கணிப்பாளர் நிக் நானோஸ் எச்சரித்துள்ளார்.

Tamil Business Directory

உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியம், கனடாவை தனது முதலாவது ‘இணை உறுப்பினராக’ இணைவது குறித்து ஆராயுமாறு வரலாற்றுப்பூர்வ அழைப்பொன்றை விடுத்துள்ளது.

இந்த முன்மொழிவு முழுமையான உறுப்பினர் அந்தஸ்தை உள்ளடக்கியது அல்ல என்பதுடன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத ஒரு புதிய அந்தஸ்தாகும்.

இந்த அழைப்பை விடுத்து உரையாற்றிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அர்சுலா வொன் டெர் லேயன், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பகிரப்பட்ட மதிப்புகளை சுட்டிக்காட்டினார்.

செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், ஆர்க்டிக் பகுதிகள், புவிசார் அரசியல், உக்ரைன் விவகாரம், பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலி என பல துறைகளில் இரு தரப்பும் ஒரே பார்வையைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அழைப்பை வியாழக்கிழமை வரவேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா முழுமையான ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் அந்தஸ்தைக் கோரவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

மேலும், “கனடாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வரையில்” மட்டுமே இந்த பிரத்யேக கூட்டாண்மை சாத்தியப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பிரெட் ஹவுஸ் கருத்து தெரிவிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதித் தரநிலைகள் மற்றும் விதிகளை கனடா ஏற்றுக்கொள்வது அதிக செலவீனங்களை ஏற்படுத்தும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.