Reading Time: < 1 minute

விண்வெளியில் இருந்து ஏலியன்கள் மர்மமான முறையில், பூமிக்கு சிக்னல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய விஞ்ஞானிகள் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

குறித்த ஏலியன் சிக்னலை விஞ்ஞானிகள் எப்ஆர்பி என அழைக்கின்றனர். இந்த சிக்னலை ஏலியன்கள் தான் அனுப்பியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விண்வெயில் இருந்து வந்த 8 ஏலியன் சிக்னல்கள் டெலிஸ்கோப் மையத்திற்கு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எப்ஆர்பி கள் ரேடியோ அலைகளின் குறுகிய சிக்னல் கொண்டாதாகும். இவை ஒரே நேரத்தில் மில்லி விநாடிகள் மட்டுமே வந்ததாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள மெக்கில் விண்வெளி நிறுவனத்தின் பிஎச்.டி மாணவி பிரக்யா சாவ்லா,

‘இதுபோன்ற 8 ஆதாரங்களையும் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. எங்களிடம் இன்னும் நிறைய எஃப்.ஆர்.பிக்கள் இருக்கின்றன. இந்த எஃப்.ஆர்.பிக்கள் அமைந்துள்ள சூழல்களையும் விண்மீன் திரள்களையும் கண்டுபிடிக்க முடியும்.

இதற்காக நாம் வேறுபட்ட தொலைகளை நோக்கிகளையும் பயன்படுத்த வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.