கனடா ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதம சுகாதார அதிகாரி தொடர்பில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதம சுகாதார அதிகாரி டாக்டர் கிரண் மூர் தொடர்பிலேயே இவ்வாறு விமர்சனம் கிளம்பியுள்ளது.
அண்மைய நாட்களாக மாகாணத்தில் கோவிட் பரவுகை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தர்களை டாக்டர் கிரன் மோர் வழங்கி வந்தார்.
குறிப்பாக உள்ளக அரங்குகளில் முடிந்த அளவு முக கவசங்களை அணிந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கி இருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அண்மையில் விருந்துபசாரம் ஒன்றில் டாக்டர் மோர் முக கவசம் இன்றி இருக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காணொளிகள் தொடர்பில் பலரும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
முக கவசம் இன்றி டாக்டர் மோர் இருக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகளே இவ்வாறு வைரலாகி வருகின்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த றொரன்டோ மேயர் ஜோன் டோரியும், முக கவசமின்றி இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.