Reading Time: < 1 minute

ஊடகங்கள் தொடர்பில் கனேடிய மக்களுக்கு போதியளவு தெளிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பிலான பிரச்சினைகளின் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகளினால் பொதுமக்கள்; பிழையாக வழிநடத்தப்படுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் மாகாண அசராங்கங்களும் பாடசாலைகளும் இந்த விவகாரத்தில் கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடகங்கள் பற்றிய அறிவு மக்கள் மத்தியில் இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சக்திகளினால் பரப்புரை செய்யப்படும் விடயங்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய ஆற்றலை மக்கள் மத்தியில் வளர்க்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழியாக பல்வேறு பிழையான அல்லது பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.