உக்ரைக் விமானம் விபத்து குறித்த விசாரணை தொடர்பாக ‘உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது ஈரான்’ என கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் எச்சரித்துள்ளார்.
அத்துடன் இந்த விபத்துக்கு காலம் நிச்சயம் பதில் செல்லும் என்றும் ஈரானின் வெளிப்படைத் தன்மையை சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணித்த உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததுடன் அவர்களில் பலர் ஈரான், கனடாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இவ்விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.
மேலும், ஈரானின் தாக்குதலில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் மனிதத் தவறால் இந்த விமான விபத்து நடந்துள்ளதாகவும் இந்நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனிதத் தவறுகளால் இது நடந்துள்ளதாகவும் ஈரான் வருத்தம் தெரிவித்தது. மேலும், விமான விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தது.
இந்த சூழலிலேயே நிலையில் ஈரான் நடத்தும் விசாரணை குறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்கோஸ் மேற்படி எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.