ஈரானுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரானில் அண்மையில் மாஷா அம்னி என்ற யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் கனேடிய அரசாங்கம், ஈரான் மீது தடைகளை விதித்துள்ளது.
ஈரானின் ஒன்பது நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்கள் மீது கனடா இவ்வாறு தடைகளை அறிவித்துள்ளது.
22 வயதான மாஷா அம்னி என்ற யுவதி ஹிஜாப் உரிய முறையில் அணியாத காரணத்தினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய சிரேஸ்ட அரசாங்க அதிகாரிகள் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்வர்கள் மீது கனடா தடைகளை அறிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலென் ஜோலி இந்த தடைகள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரான் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.