ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீறி பணப் பரிவர்த்தனைகளுக்கு உதவியதாகக் குற்றஞ்சாட்டி, கனடாவைச் சேர்ந்த 8 நிதிச் சேவை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
நவம்பர் 6ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கையில், ஒன்ராறியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் இயங்கும் Million Exchange, Amin Exchange, NIA Nations Currency, Farah Exchange, Darvish Exchange உள்ளிட்ட நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி உள்ளிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் மூலம் ஈரானுடன் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள உதவியதாக அமெரிக்க நிதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், முன்னாள் கனடிய ஒலிம்பிக் பனிச்சறுக்கு வீரர் ரியான் வெடிங் (Ryan Wedding) தொடர்புடைய போதைப்பொருள் பணமோசடி நடவடிக்கைகளுக்கும் சில நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கனடாவின் நிதிப் புலனாய்வு அமைப்பான FINTRAC உடனான ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.