Reading Time: < 1 minute

ஈட்டோபிக்கோ பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களை இனங்காண்பதற்கு ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Islington Avenue மற்றும் Rexdale Boulevardற்கு கிழக்கே, Hadrian Drive மற்றும் Chalfont வீதிப்பகுதியில் கடந்த ஐந்தாம் திகதி மாலை ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இடந்தச் சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ காவல்துறையினர், 17 வயதுப் பெண் ஒருவர் அந்த வழியே நடந்து சென்று கொண்டிருந்த போது, கறுப்பு நிற கார் ஒன்றில் வந்த இரண்டு பெண்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த பொருட்களை அபகரித்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

மிரட்டலுக்குப் பயந்த குறித்த அந்தப் பெண், தன்னிடம் இருந்த பொருட்களை அவர்களிடம் கொடுத்ததாகவும், பொருட்களை பெற்றுக்கொண்ட இரண்டு பெண்களும் அங்கிருந்து காரில் தப்பித்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைத்த கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரத்தினையும், படத்தினையும் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இந்தச் சந்தேக நபர்கள் ஆயுதத்துடன் நடமாடக்கூடும் என்பதனால், அவர்களைக் காண்போர் அவதானமாக இருக்குமாறும், அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.