இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு கனடா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது எதிர்பாராத விதமாக திடீர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு கனடிய அரசாங்கமும், முக்கிய அரசியல்வாதிகள் பலரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ டுவிட்டரில் பதிவு ஊடாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமையை முழுமையாக ஆதரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தீவிரவாத தாக்குதலை; கண்டிப்பதாக கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வாறான தீவிரவாத், இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் ஆதரவினை வெளிப்படுத்துவதாகவும் தாக்குதல்களை கண்டிப்பதாகவும வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.