இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆபிரிக்க அரசாங்கம் இனவழிப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஆதரவளிக்கப் போவதில்லை என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இனவழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி சர்வதேச நீதிமன்றில் தென் ஆபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு தற்பொழுது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நீதிமன்றின் செயற்பாடுகளுக்கு கனடா எப்போதும் ஆதரவளிப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இதன் ஊடாக தென் ஆபிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கிற்கு ஆதரவளிப்பதாக அர்த்தப்படாது என தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் மதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை கனடா கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.