Reading Time: < 1 minute

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சுமார் 20 கிலோகிராம் ‘ஹசீஸ்’ போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற கனேடியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகநபரின் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி 200 மில்லியன் இலங்கை ரூபாவுக்கும், அதாவது ரூ.20 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.