Reading Time: < 1 minute

Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல் இன்று (15) திறக்கப்பட உள்ளது.

1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் , இலங்கையில் தனியார் துறையின் மிகப் பெரிய முதலீடாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் வசதிகள், வணிகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் இங்கு உள்ளது., தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அர்த்தம் சேர்த்துள்ளது.

687 அறைகளைக் கொண்ட சினமன் லைஃப் Ballroomகள், விருந்து அரங்குகள் மற்றும் மாநாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது.

5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு சேவைகளை வழங்குவது இதன் சிறப்பு அம்சமாகும். சர்வதேச மாநாடுகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய பெரிய அளவிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும், Cinnamon Life ஆனது உலகளாவிய சந்திப்புகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுப்பயணங்களுக்கான முன்னணி இடமாகும்.

250 சமையல் கலைஞர்களுடன் 1,500 க்கும் மேற்பட்ட குழுவினர் சினமன் லைஃப் விருந்தினர்களுக்கு சுவையான உணவு மற்றும் பானங்களுடன் விருந்தளித்து வருகின்றனர்.

French Bistro முதல் American Grill வரை வெவ்வேறு உணவு சுவைகளை இங்கு சுவைக்க முடியும். இதேவேளை, ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களுக்கு மேலும் பல சுவையான சமையல் அனுபவங்களை வழங்கவும் Cinnamon Life தயாராக உள்ளது.

ஹோட்டல் வளாகத்தில் உள்ள அழகாக வடிவமைக்கப்பட்ட இடங்களின் அழகு மற்றும் நேர்த்தியான அமைப்பு திருமணங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகளுக்கு சிறந்த இடமாக அமைக்கப்பட்டுள்ளது.

சினமன் லைஃப் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா இன்று (15) பிரமாண்டமாக திறந்து வைக்கப்படவுள்ளது.

மேலும், திட்டத்தின் இறுதி கட்டம் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு வணிக வளாகம் மற்றும் விளையாட்டு இடங்களுடன் கூடிய பொழுதுபோக்கு மண்டலத்துடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.