Reading Time: < 1 minute

இலங்கைக்கு சுற்றுலா சென்ற 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவர் நேற்று (16) காலி ஹிக்கடுவை கடலில் நீராடி கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார்.

குறித்த கனேடிய பிரஜை கடலில் நீராடுவது ஆபத்து என்கிற எச்சரிக்கை அறிகுறிகளை மீறி கடலில் நீராடிக் கொண்டிருந்ததால் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டுள்ள நிலையில், ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.