பல கனேடிய குடிமக்களுக்கு எதிராக தனிப்பட்ட தடைகளை அறிமுகப்படுத்துவது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், ஒன்டாரியோ அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் MPPக்கள் உட்பட மேலும் 333 கனேடியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
ரஷ்ய கூட்டமைப்பால் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியல், சமீபத்திய ரஷ்யாவுக்கு எதிராக பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட சமீபத்திய தடைகளுக்கு பதிலடி என்று கூறுகிறது,
இது இந்த வாரம் உக்ரைனுக்கு மில்லியன் கணக்கான உதவி மற்றும் $2.4 பில்லியன் கடனை கனடா அறிவித்ததின் பதிலடி என ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை கூறுகின்றது.
இதில் ஒண்டாரியோ நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் உட்பட உட்பட மேலும் 333 கனேடியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.
Source: https://mid.ru/ru/foreign_policy/news/1863094/